ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2

இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.

இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்.-பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார்- மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.

எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.

தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின.

4 comments on “ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2

  1. P.AYYANAR. சொல்கிறார்:

    ENDRENRUM SUPERRRSTAR ENGALVEETTUPILLAI M.G.RRRRRRRR.

  2. chandru சொல்கிறார்:

    arumai arumai.

    unmaiyileye padippatharkku nandraga ullathu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s