ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3

எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.

தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.

தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.

ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.

சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.

4 comments on “ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s