ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.

2 comments on “ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s