என்றும் முன்னனியில் எம்.ஜி.ஆர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி என்னுடைய தாத்தாவும், பாட்டியும் சொன்னவை மனதில் ஆழமாக பதிந்து போயின. இப்படியொரு மனிதன் வாழ்ந்திருக்க முடியுமா என எண்ணி வியப்படைந்த நாட்கள் எத்தனையோ!.

என்னதான் நடிப்புக்கு கமல், ஸ்டெயிலுக்கு ரஜினி என்று போனாலும் நமது தலைவரை மக்களால் மறக்க முடியவில்லை. அதற்கு சாட்சியாக எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தினையும் இன்றும் திரையிட்டாலும் அரங்கம் நிறைந்து ஓடும் காட்சிகளே போதும்.எந்தெந்த நடிகன் எம்.ஜி.ஆரோடு கொஞ்சம் ஒத்துப் போவதுபோல தெரிந்தாலும் மக்கள் உடனே ஏற்றுக்கொள்ளுவார்கள் என எண்ணி, பல சேட்டைகளை செய்கிறார்கள் இன்றைய நடிகர்கள்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி போல இதுவரை மக்கள் மகிழ்ந்த ஆட்சி இருந்திருக்குமோ, இல்லை இனி வருங்காலத்தில் அமைந்திடுமோ என தெரியவில்லை. மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி வந்திட எனக்கு ஓட்டுபோடு எனக்கு ஓட்டு போடு என பல்வேறு கட்சிகளும் இவர் பேரையே பயன்படுத்தி ஓட்டாக மாற்ற பார்க்கின்றனர்.

அரசியல், சினிமா என இருதுறையிலும் இன்னும் எம்.ஜி.ஆரின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதற்காகவே இந்த இரண்டையும் சுட்டிக் காட்டினேன். இந்த தளம் கிராமத்து மக்களின் நினைவில் இன்னும் சாகாத வரம் பெற்றவராய் திகழ்ந்திடும் நமது எம்.ஜி.ஆரை நினைத்து உருகவே தொடங்கப்பட்டது. அரசியலில் மாற்று கருத்து இருந்தாலும், சில நண்பர்கள் தளத்தினை பாராட்டி செல்கின்றனர். அது எம்.ஜி.ஆரின் புகழால் நிகழ்ந்த ஒன்று.

இடுகைகளைப் படித்தும், அதற்கு தக்கதொரு கருத்து முன் வைத்தும், திரட்டிகளில் வாக்களித்தும் நீங்கள் செய்யும் செயல்களுக்காக மிக்க நன்றி!. எம்.ஜி.ஆரின் நினைவுகளை இங்கு தொகுப்பது என்னுடைய மனநிறைவுக்காக மட்டும்தான். ஆனாலும் பெரும் ஆதரவு தந்து என்னை பிரமிக்க வைத்திருக்கிருக்கின்றீர்கள். அற்புதமான கலைஞனை மக்களின் நாயகனை பற்றி எழுதுவதற்கே எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன.
எல்லோருக்கும் நன்றி!!!!

வேர்டுபிரஸ் பக்கத்தில் வெளிவந்தது –

இன்றைய முன்னனி இடுகளின் பட்டியலில் –

Blogs of the Day –

இன்ட்லியில் மக்கள் வாக்குகளுடன் –

2 comments on “என்றும் முன்னனியில் எம்.ஜி.ஆர்

  1. வரன் சொல்கிறார்:

    ஆம் MGR அவர்களுக்கு நிகர் அவரே தான் அத்துடன் நீங்கள் எழுதும்
    விதமும் நன்றாக உள்ளது. நன்றிகளும் வாழ்த்துக்களும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s