ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 5

1969-ல் மிகப் பெரிய வெற்றிப்படம் அடிமைப்பெண். 25 ஆண்டுகளுக்குப் பின் அடிமைப்பெண் 1994 சென்னை கமலா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அவசர போலீஸ் 100-க்கு போன்செய்து போலீஸை வரவழைக்கும்படி ஆனது. கமலா தியேட்டர் அதற்குமுன் சந்தித்திராத அனுபவம் இது. அந்த அளவுக்கு கூட்டமும், ரசிகர்களின் ஆரவாரமும் இருந்ததாம்.

நம் நாடு நாகிரெட்டிக்கு எங்க வீட்டுப்பிள்ளையைத் தொடர்ந்து இதுவும் வெற்றி தேடித் தந்தது. எம்.ஜி.ஆர் மாறுபட்ட கதையம்சங்களில் அக்கறை காட்டுபவர் என்பதற்கு நம் நாடு படமும் ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர். வாத்தியார் என்றழைக்கப்படுவதை பிரபலமாக்கிய படம் இது. மாட்டுக்கார வேலன் மொழிமாற்று படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கிறாறென்றால் அது நிச்சய வெற்றி என்பதை இந்தப் படமும் நிரூபித்தது.

ஜிக்ரி தோஸ்த் என்ற ஜிதேந்திரா நடித்த இந்திப் படத் தழுவல்தான் இது. ஒரே மாதிரி தோற்றமுடைய- குணாதிசயத்தில் வேறுபாடு இல்லாத இரட்டை வேட நடிப்பில் கூட எம்.ஜி.ஆர். ஜனரஞ்சகத்தைக் காட்டியிருந்தார். அடுத்தடுத்த வெளியீடுகளில் இந்தப் படத்தின் விநியோக போட்டோமை விலை புதிய படங்களுக்கும் மேலாக இருந்தது, இருக்கிறது. வினியோகஸ்தரான கனகசபை செட்டியார், இந்தப் படத்தில் சம்பாதித்ததைப் போல் வேறெதிலும் சம்பாதித்ததில்லை. அவர் தயாரித்த முதல் படம் இது. எங்கள் தங்கம் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம். அவர்களுக்கு முதல் வண்ணப்படமும்கூட. இன்றைக்கும் வசூலைத் தந்துக் கொண்டிருக்கும் வெற்றிப்படம் இது.

எம்.ஜி.ஆர் உச்சிக்குடுமி வைத்து மொட்டைத்தலையுடன் ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா வா என்று நிலவில் மனிதன் இறங்கியதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதாகலாட்சேப காட்சியில் பாடி நடிக்கும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. போட்டோக்ஷாக்காரன் 1971-ல் இந்தியாவிலேயே சிறந்த நடிகராக எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது பெற்றத்தந்த படம் இது. தமிழ் நடிகர் ஒருவர் தேசிய அளவில் விருது பெற்றது அதுவே முதல் முறை. போட்டோக்ஷாக்காரன் படத்திற்காக போட்டோக்ஷா ஓட்டும் போட்டிக் காட்சி அண்ணாநகரில் படமாக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆர் நிஜமான போட்டோக்ஷா காரர்களை விட நிஜமாகவே வேகமாக ஓட்டி முதலாவதாக வந்ததற்கு, சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களே சாட்சி.

55 வயது வலிமை அது. போட்டோக்ஷாவில் இருந்தபடியே எதிரிகளோடு சிலம்பமாடுவார் எம்.ஜி.ஆர். பின்புறம் அமர்ந்திருக்கும் கதாநாயகி மீதும் அடிபடாதபடி, ஹேண்டில்பாரில் கை வைக்காமல் போட்டோக்ஷாவை சுற்றி சுற்றி ஓட்டியபடியே எம்.ஜி.ஆர். மோதும் அந்த லாவகமும், ஸ்டைலும் வேறு எந்த இந்திய நடிகரிடமும் காணமுடியாத சிறப்பாகும். இப்படி படத்தில் ஏராளமான சிறப்புகள் இருந்ததால் சத்யா மூவிஸ§க்கு இது வசூலை வாரிக் குவிக்கும் படமாக அமைந்தது.

நல்ல நேரம் ஹாத்தி மேரே சாத்தியை தயாரித்த தேவர், இதை தமிழுக்கும் கொண்டு வந்தார். படம் தமிழிலும் சூப்பர் ஹிட். இதய வீணை பத்திரிகையாளர் மணியன், வித்வான் வே.லட்சமணன் தயாரிப்பு இதய வீணை. ஆனால் படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகையில் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட 10-10-72 இரவில் ஜெமினி ஸ்டுடியோவில் இதய வீணை எடிட்டிங்கில் இருந்தார். 20-10-72ல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியபோது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கி விட்டார். உலகம் சுற்றும் வாலிபன் இந்த படம் உருவான விதம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.

இதுவரை அயல்நாடுகளில் படமாக்கப்பட்ட படங்களிலேயே அதிக செலவு ஏற்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும். அது மட்டுமன்றி அயல்நாடு செல்லாத நம்பியார், தேங்காய் சீனிவாசன், மனோகர் ஆகியோரையெல்லாம் அயல்நாடுகளில் அவர்கள் இருப்பதுபோல் அரங்கங்களை எண்ண முடியாத அளவில் உருவாக்கிப் படமாக்கினார் எம்.ஜி.ஆர். தமிழில் சமூகப் படமொன்றிற்காக இதுவரை அதிகபட்ச அரங்கங்களை (செட்) சந்தித்த படம் உலகம் சுற்றும் வாலிபனே. நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலில் மஞ்சுளாவுடன் எம்.ஜி.அர். நடித்த காட்சிகளில் எது அரங்கம் எது அயல்நாட்டுக் காட்சி என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் படமாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

9 comments on “ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 5

 1. Suresh சொல்கிறார்:

  I was ordent fan of MGR in my early days of life – that is when I was not mathured. Now, in my opinion, he is one of the many guys in cinema who rode on mere luck and charisma (created by the idiotic dravidian movement and films based on that).

  He can not act (if he cries, it will be a comedy). He can not dance. He is good only in stunts. He is far below in his perfrormance compared to Sivaji Ganesan.

  Please be open and dont follow anyone blindly. We, the tamilians, have been paying the prize for following leaders without questioning.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இறந்து போன ஒரு மாமனிதன் பற்றி எழுதினேன். அதற்கு இத்தனை எதிர்ப்பா!.

   தமிழன் என்றால் தமிழனை மட்டும் தான் பாராட்ட வேண்டுமா. ஏன் தமிழனின் கண்டுபிடிப்புகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என எண்ணிப்பாருங்கள். உண்மை புரியும். எனக்கும் சிவாஜியை பிடிக்கும், எம்.ஜி.ஆருக்கும் சிவாஜியை பிடிக்கும். சிவாஜிக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும்.

   தங்கள் கருத்துக்கு நன்றி!,.

   • Suresh சொல்கிறார்:

    நண்ப!!

    எம்.ஜி.ஆர் என்ற மனிதனைப் பற்றி நான் இங்கு பேச முற்படவில்லை. ஒரு நடிகர் என்ற கண்ணோட்டத்துடனேயே என்னுடைய விமரிசனம். நம்மிடையே இல்லை என்ற காரணத்திற்காக அவரைப் பொய்யாக புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.
    அரசியலில் அவர் இன்றைய முதல்வரைக் காட்டிலும் பன்மடங்கு நல்லவர்.
    என்னுடைய கருதுக்களுக்கு இன்னும் காட்டமான பதிலை எதிபார்த்தேன். தலைவனை குறை பேசுபவரை எதிரியினும் மோசமாகக் கருதும் இன்றைய கலாச்சாரம்தான் கவலை கொள்ள வைக்கிறது. தாங்கள் நிதானத்துடன் பதிலளித்திருக்கிறீர்கள். நன்றி.

    அதே போன்று தமிழனை மட்டுமே பாராட்ட வேண்டும் என்ற குறுகிய எண்ணமும் இல்லை. பாடகர்களில் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்ரணியமும், எஸ்.ஜானகியுமே..ரேவதியின் நடிப்பும் பிடிக்கும். சுஹாசினியின் நடிப்பும் பிடிக்கும். ரசனையில் பேதமில்லை..புரிந்து கொள்வீர்கள் என நம்புகிரேன்…

 2. aravarasan சொல்கிறார்:

  super, பட்டைய கிளப்பு.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   Suresh அவர்களுக்கு,

   என்னுடைய மன திருப்திக்காவே எம்.ஜி.ஆர் வலைப்பூவை தொடங்கினேன். சில படங்களில் அவருடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். நான் நடிகன் என்ற முறையில் மட்டும் எம்.ஜி.ஆரை நோக்கியிருந்தால் உங்களுடைய எண்ணத்துடன் ஒத்துப் போயிருப்பேன். ஆனால் நான் அவரின் வாழ்க்கையை பார்க்கிறேன்.

   வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் எம்.ஜி.ஆரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களின் பட்டியலை தருகிறேன்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பரே!

 3. கோமதி சொல்கிறார்:

  மாற்று மொழி திரைப்படங்களிலும், பல்வேறு வெற்றி பெற்ற கதைகளையும் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்து நடித்தார் என்பதே இப்போதுதான் தெரிகிறது.

  வாழ்க எம்.ஜி.ஆர்.
  வளர்க உம் புகழ்.

 4. sathiya சொல்கிறார்:

  mgr oru mamanither mgr is great man 2000000000000000000000year pukail non stop……………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s