ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 6

படமாக்கத்தில் சாதனை நிகழ்த்தியதை போல் திரையிடப்பட்டதிலும் சாதனை நிகழ்த்தியது உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் அயல்நாடுகளில் படமாக்கப்பட்டதன் காட்சிகள் அடங்கிய நெகடிவ் நாசமாகிவிட்டது என்று தமிழகமெங்கும் வதந்தியாக செய்திகள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் மீறி படம் தயாரானால், சென்னை போட்டோல் படம் திரையிடுவதற்கு தியேட்டர் கிடைப்பது கேள்விக்குறியானது. கலைஞர் ஆட்சியின் மிரட்டல்களை சந்திக்கத் துணிந்து தியேட்டர்கள் கிடைத்தன. போஸ்டர்கள் ஒட்டினால் அதை கிழிப்பதற்கு தி.மு.கவினர் தயாராக இருந்தனர்.

தினத்தந்தியுடன் அப்போது எம்.ஜி.ஆருக்கு சுமூகமான உறவு இல்லை. அதனால் சமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரது பட விளம்பரங்களே தினத்தந்தியில் இடம் பெறவில்லை. அதனால் சென்னை போட்டோல் போஸ்டர்களே ஒட்டாமல், பிற நாளிதழ் விளம்பரங்களாலும், ஸ்டிக்கர் விளம்பரத்தாலும் (தமிழில் ஸ்டிக்கர் விளம்பரம் அறிமுகமானது இதிலிருந்துதான்) உலகம் சுற்றும் வாலிபன் வெள்ளி விழா கண்டது. படத்தின் பிரிண்டுகளை வெளியூர்களுக்கு அனுப்பும்போது எதேனும் அசம்பாவிதங்கள் நடத்தக்கூடும் என்று கருதிய எம்.ஜி.ஆர். அதற்கும் ஒரு வழி செய்தார்.

ஒரே ஊருக்கு மூன்றுவிதமான படப்பெட்டிகளை எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்தார். மூன்றில் ஏதேனும் ஒன்றில்தான் நிஜமான படப்பிரதி இருக்கும். மற்றொன்றில் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும், மூன்றாவதில் குப்பை அல்லது கழிவு ஃபிலிம் இருக்கும். இப்படி மூக்கில் விரல் வைக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக உலகம் சுற்றும் வாலிபன் 20 திரையரங்குகளில் 100 நாட்களை கண்டது. 5 வருடங்களுக்கு ஒரு முறையல்ல, ஆண்டு தவறாமல் திரையரங்குகளுக்கு படையெடுத்து வசூலை வாரிக் குவிக்கும் ஒரே தமிழ் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபனே.

நேற்று இன்று நாளை அரசியல் நெடி சற்று அதிகமுள்ள எம்.ஜி.ஆர். படம் இது. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்- தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் என்று தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில் எம்.ஜி.ஆர். பாடுவதாக உள்ள வரிகள் தி.மு.க ஆட்சிக்கெதிரான வலுவான பிரச்சாரமாக அமைந்தது. இந்தப் படமும் பல கெடுபிடிகளுக்கிடையில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. வெற்றியும் கண்டது. போட்டோமைக்குரல் ஒரேயரு கனவுப்பாடல் தவிர படம் முழுக்க எம்.ஜி.ஆருக்கு வேஷ்டி சட்டைதான். ஸ்ரீதர் இயக்கி முதன் முதலாக எம்.ஜி.ஆர். நடித்த எளிய கிராமியப் படமான போட்டோமைக்குரல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ஈடான வெற்றியைப் பெற்றது. இது கன்னடப் படமொன்றின் தழுவலாகும். சிரித்து வாழ வேண்டும் போட்டோமைக்குரல் வெளிவந்த 3 வார இடைவெளியில் எம்.ஜி.ஆர் படங்களின் இடைவெளிக்குபின் இதுவும் 100 நாட்கள் வெற்றிப் படமானது. அமிதாப், பரான் நடித்த ஜஞ்ஜீர் என்ற இந்திப் பட தழுவலான இதில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் ஏற்றிருந்தார்.

தொடர்ந்து ராஜேஷ்கன்னா இரட்டை வேடத்தில் நடித்த சச்சா ஜுட்டட இந்தித் தழுவலான நினைத்ததை முடிப்பவன், யாதோங்கி பாரத் இந்தித் தழுவலான நாளை நமதே என்று வரிசையாக எம்.ஜி.ஆர். மொழிமாற்று படங்களாக நடித்து அவையும் வெற்றி. இதயக்கனி ஏதோ ஓய்வெடுத்து நடிக்க வந்தது போல் (60 வயதில்) ஜம்மென்று இருப்பார் எம்.ஜி.ஆர். நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, என்ற பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் தென்னகமாம் இன்பத் திருநாட்டில் என்ற வரிகளுக்கேற்ப காவிரி உற்பத்தியாகி பாயும் இடங்கள் வரை எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டுவதற்காக சுமார் 2000 மைல்கள் சுற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் எம்.ஜி.ஆரது இளமையோடு போட்டி போடுபவர் ராதா சலூஜா. எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் எப்படி இருந்தாரோ அதேபோல் இருந்தார் இதயக்கனியிலும். 1975-ன் சூப்பர் ஹிட் படம் இது. பல்லாண்டு வாழ்க தோ ஹாங்கேன் பாரா ஹாத் என்ற சாந்தாராம் படத்தழுவல் இது முழுக்க அவுட்டோரில் (மைசூர் படம் இது. பத்திரிகையாளர் மணியன் தயாரிப்பில் இது 3-வது எம்.ஜி.ஆர். படம்) இதுவும் வெற்றி. நீதிக்கு தலைவணங்கு அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக தானே தண்டனை வாங்கிக் கொள்ளும் வித்தியாசமான வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். படத்தில் ஒரேயரு டூயட்தான். இதுவும் எம்.ஜி.ஆர் படங்களின் வழக்கத்திற்கு மாறானது. இன்றைக்கு வெளிவரும் படங்களோடு ஒப்பிடும்போது நீதிக்கு தலைவணங்கு கலையம்சமுள்ள படமாகவே கருதப்பட வேண்டும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரே மொழியில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கடைசிப்படம் வரை கதாநாயகனாகவே நடித்து வெற்றிகரமாக திரையுலகை விட்டு விலகிய ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். தான் என்பதற்கு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற எம்.ஜி.ஆரின் கடைசிப்படம் ஒரு உதாரணம்.

ஒரு வரலாற்றின் வரலாறு முடிவுற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s