எம்.ஜி.ஆர் சொன்னா சரியா இருக்கும்

‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
‘படம் நிறுத்தப்படுகிறது.’
வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

– ஆர். முத்துக்குமார்

நன்றி –
ஆர். முத்துக்குமார் – ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்

Advertisements

எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் – காவல் தெய்வத்தை கண்முன் நிறுத்தினார்

மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது. இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது. பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த். கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து “வீரன்” என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார். கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. எனினும், எம்.ஜி.ஆர். நடித்த “மதுரைவீரன்” 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. உடுமலை நாராயணகவி எழுதிய “பார் கடல் அலை மேலே” என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார். தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால், இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். பாடலை விட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந்திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டி யாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை. எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும், தனியாக இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு, நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார். “மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர். முத்து எழுதிய புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம் 2 மென்நூல் வடிவில்

எம்.ஜி.ஆர் முத்து எழுதிய புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறை நம்முடைய தளத்தில் கொடுத்திருந்தேன். அதை மென்நூலாக மாற்றும் முயற்சியில் இரண்டாம் பாகம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

சில அரிய படங்களையும் இணைத்துள்ளேன். மென்நூலில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் மறுமொழியில் கூறவும்.

எம்.ஜி.ஆர். முத்து எழுதிய புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம்-2ஐ தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

நம்முடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

எம்.ஜி.ஆர். முத்து எழுதிய புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம் 1 மென்நூல் வடிவில்

எம்.ஜி.ஆர் முத்து அவர்கள் எழுதிய வள்ளல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இது வரை நம்முடைய எம்.ஜி.ஆர் வலைப்பூவில் வெளிவந்ததை அறிவீர்கள். நிறைய நண்பர்கள் புத்தகம் முழுவதையும் மென்நூலாக கொடுக்குமாறு கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு – பாகம் 1 இப்போது மென்நூல் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் காணக்கிடைக்காத படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். முத்து எழுதிய புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம்-1ஐ தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

நம்முடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை படித்து மகிழுங்கள்.

மிக விரைவில் அடுத்த பகுதியையும் மென்நூலாக தருகிறேன்.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.

1. சதி லீலாவதி -1936
2. இருசகோதரர்கள் -1936
3. தட்சயக்ஞம் -1938
4. வீரஜகதீஷ் -1938
5. மாயாமச்சேந்திரா -1939
6. பிரகலாதா-1939
7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941
8. அசோக்குமார் -1941
9. தமிழறிவும் பெருமாள் -1941
10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943
11. அரிச்சந்திரா -1944
12. சாலிவாகணன் -1945
13. மீரா -1945
14. ஸ்ரீ முருகன் -1946
15. ராஜகுமாரி -1947
16. பைத்தியக்காரன் -1947
17. அபிமன்யு -1948
18. மோகினி -1948
19. ராஜமுக்தி -1948
20. ரத்னக்குமார் -1949
21. மருதநாட்டு இளவரசி -1950
22. மந்திரிகுமாரி -1950
23. மர்மயோகி -1951
24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)
25. சர்வாதிகாரி -1951
26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)
27. அந்தமான் கைதி -1952
28. குமாரி -1952
29. என் தங்கை -1952
30. நாம் -1953
31. ஜெனோவா -1953(மலையாளம்)
32. ஜெனோவா -1953
33. பணக்காரி -1953
34. மலைக்கள்ளன் -1954
35. கூண்டுக்கிளி -1954
36. குலோபகாவலி -1955
37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956
38. மதுரை வீரன் -1956
39. தாய்க்குப் பின் தாரம் -1956
40. சக்கரவர்த்தி திருமகள் -1957
41. ராஜராஜன் -1957
42. புதுமைப்பித்தன் -1957
43. மகாதேவி -1957
44. நாடோடி மன்னன் -1958
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959
46. பாக்தாத்திருடன் -1960
47. ராஜா தேசிங்கு -1960
48. மன்னாதி மன்னன் -1960
49. அரசிளங்குமரி -1961
50. திருடாதே -1961
51. சபாஷ் மாப்ளே -1961
52. நல்லவன் வாழ்வான் -1961
53. தாய்சொல்லைத் தட்டாதே -1961
54. ராணி சம்யுக்தா -1962
55. மாடப்புறா -1962
56. தாயைகாத்த தனையன் -1962
57. குடும்பத்தலைவன் -1962
58. பாசம் -1962
59. விக்கிரமாதித்தன் -1962
60. பணத்தோட்டம் -1963
61. கொடுத்து வைத்தவன் -1963
62. தர்மம் தலைகாக்கம் -1963
63. கலை அரசி -1963
64. பெரிய இடத்துப் பெண் -1963
65. ஆனந்த ஜோதி -1963
66. நீதிக்கு பின் பாசம் -1963
67. காஞசித் தலைவன் -1963
68. பரிசு -1963
69. வேட்டைக்காரன் -1964
70. என் கடமை -1964
71. பணக்காரக் குடும்பம் -1964
72. தெய்வத்தாய் -1964
73. தொழிலாளி -1964
74. படகோட்டி -1964
75. தாயின் மடியில் -1964
76. எங்க வீட்டுப் பிள்ளை -1965
77. பணம்படைத்தவன் -1965
78. ஆயிரத்தில் ஒருவன் -1965
79. கலங்கரை விளக்கம் -1965
80. கன்னித்தாய் -1965
81. தாழம்பூ -1965
82. ஆசைமுகம் -1965
83. அன்பே வா -1966
84. நான் ஆணையிட்டால் -1966
85. முகராசி -1966
86. நாடோடி -1966
87. சந்திரோதயம் -1966
88. தாலி பாக்கியம் -1966
89. தனிப்பிறவி -1966
90. பறக்கும் பாவை -1966
91. பெற்றால் தான் பிள்ளையா? -1966
92. தாய்க்கு தலை மகன் -1967
93. அரச கட்டளை -1967
94; காவல்காரன் -1967
95. விவசாயி -1967
96. ரகசிய போலீஸ்115 -1968
97. தேர்த்திருவிழா -1968
98. குடியிருந்த கோயில் -1968
99. கண்ணன் என் காதலன் -1968
100. ஒளிவிளக்கு -1968
101. கணவன் -1968
102. புதிய பூமி -1968
103. காதல் வாகனம் -1969
104. அடிமைப் பெண் -1969
105. நம்நாடு -1969
106. மாட்டுக்கார வேலன் -1970
107. என் அண்ணன் -1970
108. தலைவன் -1970
109. தேடிவந்த மாப்பிள்ளை -1970
110. எங்கள் தங்கம் -1970
111. குமரிக்கோட்டம் -1971
112. ரிக் ஷாக்காரன் -1971
113. நீரும் நெருப்பும் -1971
114. ஒரு தாய் மக்கள் -1971
115. சங்கே முழங்கு -1972
116. நல்ல நேரம் -1972
117. ராமன் தேடிய சீதை -1972
118. நான் ஏன் பிறந்தேன் -1972
119. அன்னமிட்டகை -1972
120. இதய வீணை -1972
121. உலகம் சுற்றும் வாலிபன் -1973
122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973
123. நேற்று இன்று நாளை -1974
124. உரிமைக்குரல் -1974
125. சிரித்து வாழவேண்டும் -1974
126. நினைத்ததை முடிப்பவன் -1975
127. நாளை நமதே -1975
128;. இதயக்கனி -1975
129. பல்லாண்டு வாழ்க -1975
130. நீதிக்கு தலைவணங்கு -1976
131. உழைக்கும் கரங்கள -1976
132. ஊருக்கு உழைப்பவன் -1976
133. நவரத்தினம் -1977
134. இன்று போல் என்றும் வாழ்க -1977
135. மீனவ நண்பன் -1977
136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977

தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்

1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956
2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956
3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957
4.மகாதேவி (மகாதேவி) -1958
5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961
10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969
44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975
53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978

இந்தி மொழி மாற்ற படங்கள்

1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976

என்றும் எம்.ஜி.ஆர் NO 1

மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பற்றி நாளேடுகளும் இணையதளங்களும் அடிக்கடி சர்வே நடத்துவது வழக்கம். அப்படி whopopular.com தளத்தில் 12 தலைப்புகளில் சர்வே நடந்து வருகிறது. அதில் தலைவர்கள் மற்றம் அரசியல்வாதிகள் பிரிவில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 49090 வோட்டுகள் இட்டு மக்கள் இந்திய தலைவர்களில் முதன்மையானவராக நிறுத்தி இருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர் மறைந்து 22 வருடங்கள் சென்ற பின்கூட மக்கள் மனதில் என்றும் நீக்கமற்றவராக நிறைந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.

உலக அளவில் நமது எம்.ஜி.ஆருக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா. பதினொன்று. அதாவது இரண்டு ஒன்றுகள்.

எம்.ஜி.ஆர் இன்றல்ல என்றும் No – 1.

நீங்களும் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

சில புகைப்படங்கள்.

இந்திய தலைவர்கள் பட்டியலில்,…

உலக தலைவர்கள் பட்டியலில்,…

2010 எம்.ஜி.ஆர் வலைப்பூ ஒரு பார்வை!.

வேர்ட்பிரஸ் அலுவலகத்திலிருந்து நமது எம்.ஜி.ஆர் தளம் 2010 எப்படி செயல்பட்டது என ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.

வாழ்க எம்.ஜி.ஆர்!. வளர்க அவர் புகழ்!.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

About 3 million people visit the Taj Mahal every year. This blog was viewed about 28,000 times in 2010. If it were the Taj Mahal, it would take about 3 days for that many people to see it.

 

In 2010, there were 137 new posts, not bad for the first year! There were 60 pictures uploaded, taking up a total of 3mb. That’s about 1 pictures per week.

The busiest day of the year was July 23rd with 682 views. The most popular post that day was ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1.

Where did they come from?

The top referring sites in 2010 were sagotharan.wordpress.com, ta.wikipedia.org, tamilmanam.net, ta.indli.com, and ta.wordpress.com.

Some visitors came searching, mostly for மாலைமலர், அண்ணியையும், எம் ஜி ஆர், சரோஜாதேவி, and கண்ணதாசன்.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1 July 2010
8 comments

2

வாழ்க்கை வரலாறு May 2010
6 comments

3

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி July 2010
5 comments

4

15.திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது June 2010

5

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1 June 2010