39.இளைய மகனுக்கு ஜோசியம் பார்த்த சத்திய தாய் மக்கள் திலகம் சொன்னவை

மக்கள்திலகம் அவர்கள் பேசும்போது மனிதனுடைய தலை எழுத்தை பற்றி அது எப்படி எந்த எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு என்ன என்ன நடக்கும் கணக்கு போட்டு சொல்லுபவர்களுக்கு தான் ஜோசியர் என்று சொல்லப்படுகிறது இந்த மாதிரி ஜோசியங்களை தன்னுடைய மகன்கள் பலன் எப்படி இருக்கின்றது வரும் காலம், அவன்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்த தாய் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளவர். இந்த மாதிரியான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பிரகாசான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பரிகாசமான வாழ்க்கை ஏற்படும். மக்கள் திலகத்தின் ஜாதக பலன் எழுதப்பட்டு இருந்தது. ஜாதகம், ஜோசியம், சாமி கும்பிடுவது அந்த சாமிக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பது. இப்படி எந்த விசயத்தில் ஒரு காலத்தில் ராமச்சந்திரனுக்கும் உண்டு. பிறகு, அவனுடைய வாழ்க்கையில் தாங்கி கொள்ள முடியாத சில சோதனை ஏற்பட்டது. அது தான்முதல் மனைவி தங்கமணி இறந்தது. அடுத்து இரண்டாவது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு படுக்கையில் நோயாளியாகியது. ஆனால், மக்கள் திலகத்திற்கு ஒரு பெரிய மனதிடத்தையும் நம்பிக்கையும்தான் எப்படியும் தான் வெற்றியை எட்டி பிடிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட்டார்.

1958ல் அவருடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. இதைவிட ஒரு விசயம் மக்கள் திலகம் கூட ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்த ஒரு பிரபல நடிகை கதாநாயகி நான் உங்களை உண்மையாகவே காதலிக்கிறேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டது. அப்பதான் தன்னுடைய கிரகத்தைபற்றி ராமச்சந்திரன் அவர்கள் நினைக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல என் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்களை சந்தித்து நீந்தி கரை ஏறி சற்று நிம்மதியாக இருக்கிறேன். நான் உண்டு என் தொழில் உண்டு என்று இருக்கிறேன். எனக்கு மீண்டும் சோதனையா என்று நினைத்தார் மக்கள் திலகம் அவர்கள். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம் எனக்கு புகழை மட்டும் கொடு வேறு எதுவும் வேண்டாம் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தார்.

தாயையும் தந்தையும் தெய்வமாய் நினைப்பவர் தந்தை தன்னுடைய மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தைக்கு தந்தையாகவும், தாய்க்கு தாயாகவும் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் என்னையும் என் அண்ணனையும் வளர்த்து வந்த என் தாய் சொல்லை தட்டாமல் மதித்து வந்தோம். எங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சிகளையும் கண்டு எங்கள் தாய் பெருமை படுவார். தந்தைக்கும், தாய்க்கும் செய்யும் கடமைகளை எங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தோம். இதோடு எங்களுக்கு குருவாக இருந்தவர்களை வணங்காமல் இருப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது இல்லை.

Advertisements

38.சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள்.

சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள். 1980-ல் முக்கிய நண்பர் கேட்கிறார்?

அதற்கு மக்கள்திலகம் அவர்களுடைய பதில், நான் 14வது வரை படித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ் இதைகேட்ட முக்கிய நபருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார். இதை கவனித்து கொண்டு இருந்த மக்கள்திலகம் அவர்கள் என்ன சார் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாக இருக்கின்றீர்களே என்ன நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா என்ற உடன் அவர் சார் மன்னிக்கனும் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு இருக்கக்கூடாது. கேட்டு விட்டேன், என்று சொல்லி முடித்தார். உடனே மக்கள் திலகம் சார் நீங்கள் கேட்டது ஒன்றும் தப்பு இல்லை, ஒரு விசயத்தை மற்றவரிடம் தெரிந்து கொள்வதால் தவறு இல்லை. இப்போ இந்த விசயத்தைப் பற்றி நானே முழுவதையும் சொல்கிறேன். நான் மூன்றாவது தான் படித்தேன் என்று சொல்லுகிறார்.

அது தவறு நான் நான்காவது வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிக்க வசதி வாய்ப்பு இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் நாடக கம்பெனிக்கு நடிக்க சென்றோம். கல்வி அறிவு என்பது பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து கிட்டு புத்தகங்களை படித்தால் மட்டும் அந்த அறிவு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஒரு மனிதன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், எப்படியும், எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் ஒரு உதாரணம் சொல்கிறேன். பன்னிரண்டாவது வரை படித்த ஒரு மாணவன் ஒரு குற்றத்திற்காக அவனை 7 வருடம் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அவன் ஜெயிலுக்குள் இருந்து கொண்டே என்ன படிக்கணுமோ அதை ஜெயில் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி பெற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிவரும்போது, படிப்பில்தேர்வு பெற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும்போது அவர் ஒரு வழக்கறிஞராக B.A. B.L., படிப்பில் தேர்ச்சி பெற்று விடுதலை ஆகி வெளியே வருகிறார். இது போல் என்னை போன்றவர்கள் அறையும், குறையுமாக படித்தவர்கள் நல்லா படிப்பு அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு கிடைக்கும் நேரங்களில் இரவு நேரத்தில் வாத்தியார்களை வரவழைத்து கற்று கொண்டேன். 14வது படிக்கும் ஒரு மாணவன் படிக்க எழுத திறமை கொண்டவன் போல் நான் இப்போ இருக்கிறேன்.

மற்றும் ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய இந்திய அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சராகவும் 10 ஆண்டுகாலம் இருந்தவர் பதவி வகித்தவர், கருமவீரர் காமராசர் அவர்கள் எத்தனாவது வரை அவர் கல்வி பயின்று உள்ளார் என்பது நாடு அறிந்த விஷயம். அதே போல் நானும் ஒருவன் என்று பெருமையாக சொல்லி கொள்ள விரும்புபவன். இதைவிட வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் கேளுங்கள் என்றார். உடனே, அவர் சார் நீங்கள் ஒரு தத்துவ மேதை எல்லாம் அறிந்த ஒரு மாமனிதர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் தங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன். அதாவது நான் தங்களை மெதுவாக உங்களுடைய கல்வி அறிவை பற்றி தொட்டு பார்த்தேன்.

இதில் தாங்கள் பள்ளிக்கூடம் சென்று பயின்ற கல்வியை விட மிக அதிகமாக கற்று உள்ளீர்கள் அதாவது ஒரு உதாரணம் இப்போ நீங்க தமிழ் ஆங்கிலத்தை தடை இன்றி படிக்கிறீங்க. தமிழ் கொள்கைபடி தமிழை இலக்கியத்தோடு எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள் இதை வைத்து பார்க்கும் போது சுமார் ஒரு பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் இலக்கியத்தோடு படித்தவராக உங்களை நாங்கள் நினைக்கிறோம். நீங்களே பலமுறை சொல்வீர்கள் “கற்றுது கை மண் அளவு கற்காதது கடல் அளவு”, இதே போல் நீங்கள் கற்றது கை அளவு அல்ல, கடல் அளவு ஆகும். உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறுத்து குறுக்கிடுகிறார். நீங்கள் என்னுடைய கல்வியை பற்றி இவ்வளவு ஆர்வத்தோடு பேசுவதால், நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நானும் என் அண்ணனும் பள்ளிக்கூடம் சென்றுபடிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லும் பாடங்களை மனதில் பதிந்து கொள்வோம். படிப்பறிவு எங்களுக்கு நல்லாவே இருந்தது. ஆனால், தொடர்ந்து எங்களால் படிக்க வசதி இல்லை, அந்த சூழ்நிலையில் தான் நானும் என் அண்ணனும் படித்தது போதும் ஏதாவது வேலை செய்வோம் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் நாடக கம்பெனிகளில் நுழைந்ததோம். அப்படி நாடக கம்பெனிகளில் வேலை செய்யும் காலத்தில் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எங்களுக்குக் கிடைக்கின்ற புத்தகங்களை நாங்கள் படிக்க தவறுவது இல்லை எனது அண்ணன் சக்கரபாணி அவர்கள் இலங்கை கண்டியிலே ஆங்கில பள்ளியில் எனது தந்தையால் சேர்க்கப்பட்டு படித்தவர் மூன்றாவது வகுப்பு வரை படித்தவர். எங்கள் தந்தையார் பட்டபடிப்பு படித்தவர். ஆங்கிலம் அவர் கல்லூரியில் லக்சரராகவும் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர். இதை கருத்தில் கொண்டு தந்தையை போல் நாமும் எப்படியாவது கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டோம்.

அதன்படி நாங்கள் இருவரும் நாடக கம்பெனி சினிமா துறையிலும் பணி செய்து கொண்டு இருக்கும்காலத்தில் எங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போது இரவு வாத்தியார் வழியாக கல்வி பயின்றோம். அந்த விடா முயற்சிதான் இன்று எங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று சொல்லி முடித்தார்.

37.தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்

மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், அன்றைய காலம் ஆங்கிலேயர் காலம், பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஏழைபிள்ளைகளுக்கு அன்றைய காலத்தில் உள்ள படிப்பு ஏட்டு சுவடி, பிறகு சிலைட்டு, மூன்றாவது புத்தங்கள் அப்படி இருக்கிற காலகட்டத்தில் கூட அரசாங்க செலவில் இவைகளை வாங்கி கொடுக்கமாட்டார்கள். பெற்றோர்கள் தான் சொந்த செலவில் வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் குடிதண்ணீர் பானையை கூட பிள்ளைகள் சொந்த காசில் தான் வாங்க வேண்டும். படிக்கின்ற நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. அந்த காலகட்டத்தை நினைத்து? மக்கள் திலகம் அவர்கள் தான் முதல் அமைச்சர் ஆன பிறகு இனிமேல் முன்போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போல பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது! ஏற்கனவே காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக தமிழ்நாட்டில் இருக்கம் போது கிராமம் தோறும்பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். பிறகு, அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கம்பிள்ளைகளுக்கு பள்ளி கூட நாட்களில் மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதைவிட மிக சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு போட வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார்.

சில மாதங்களில் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூட நாட்கள் மட்டும் தான் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்த முதல் அமைச்சர் அவர்கள் ஒருநாள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இப்படி கொடுக்கிறீர்கள் எல்லா நாட்களிலும் மதிய சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை கேட்கும்போது அன்றைக்கு கல்வி உயர் அதிகாரி திரு. வெங்கட சுப்பிரமணி அவர்களும், வருவாய் துறை அமைச்சரும், நீதி துறை அமைச்சரும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து முதல் அமைச்சர் அவர்களிடம் பேசும் போது வாரம் 7 நாட்களும் மதிய சத்துணவு போட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற விளக்கத்தை கூறுகிறார்கள். இதற்கு முதல்வர் அவர்களுடைய பதில் அய்யா இந்த லீவு நாட்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ளதுதான். அந்த லீவு நாட்களில் நாம் சாப்பிடாமல் இருப்பது இல்லை. எந்த செலவுகளையும் குறைத்து கொள்வதும் இல்லை. அரசாங்கத்தின் சாப்பில் சில விழாக்கள் கூட இந்த லீவு நாட்களில்தான் நாம் நடத்தி வருகிறோம். ஆனால் வயிற்றுக்கு பசிக்கு உணவு என்பது எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் தேவைபட கூடிய ஒரு விஷயம். அதனால், தமிழ் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு மதியத்தில் சத்துணவு சாப்பாடு கொடுக்க வேண்டும் தயவு செய்து அரசாங்கத்தில் இதை விட ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு இந்த சத்துணவு நல்ல முறையில் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த வேண்டும். நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருந்து கொண்டு ஏழை மக்கள் உடைய குறைகளை அறியாமல் நடந்து கொள்பவன் அல்ல. உங்களை போன்ற மற்ற அதிகாரிகளும் அமைச்சர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும். இப்படி மக்கள் திலகம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கியமான விஷயம் இது.

36.சோதனை

மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு 1979ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். மார்ச் மாதம் 3ம் தேதி அவரிடம் பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகம் அவர்களின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர். சபாபதி என்பவர் வெளியூர்களுக்கு செல்லும் போது, கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகம் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார். இவர் மேலே குறிப்பிட்டு சொன்னபடி பழனியில் ஒரு பொதுநிகழ்ச்சியில் இரவில் கலந்து கொண்டு மதுரைக்கு திரும்பும் வழியில் அன்றைய தினம் மக்கள் திலகம் அமர்ந்து இருந்த காரில் இவருக்கு இடம் இல்லாததால் பின்னாடி வரும் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.

முதல் அமைச்சர் காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்புக்கு போலீஸ் ஜீப் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னாடி சபாபதியும், சில அரசாங்க அதிகாரிகளும் அமர்ந்து வந்த கார் வழியில் ரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரிமீது மோதிகாரில் இருந்தவர்களுக்கு பலமாக அடிபட்டு இருக்கும் நேரத்தில் இந்த காருக்கு பின்னாடி வந்து கொண்டு இருந்த அரசியல்வாதிகள் கார்கள் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தி காரில் இருந்தவர்களை தன் கார்களில் அழைத்து கொண்டு மதுரை மத்திய அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

இதற்கு இடையில் மக்கள் திலகம் அவர்கள் மதுரையில் தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்த பிறகு, காரிலிருந்து இறங்கியவுடன் தன் உதவியாளர் சபாபதியை காணவில்லையே என்று சற்று நேரம் பார்த்துவிட்டு, தான் தங்கி இருக்கும் அறைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசாங்க விடுதியில் உள்ள அதிகாரிகள் அவர்களுடைய சாவியை எடுத்து வந்து அறையை திறந்து விடுகிறார்கள். அறைக்கு சென்ற பிறகு சபாபதி இன்னும் வரவில்லையே என்று மற்றவர்களிடம் கேட்கிறார். யாருக்குமே இதற்கு பதில் சொல்லமுடியாமல் சபாபதி காரை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள். அது சமயம் ஒருகார் வந்து நின்றது. அந்த காரில் வந்த அரசியல்வாதிகள் வேகமாக இறங்கி தலைவர் இருக்கும் அறை எது என்று கேட்டுக்கொண்டு உள்ளே, சென்றவர்கள் மக்கள்திலகம் அவர்களிடம் போய் இந்த விபத்து நடந்த விஷயத்தை சொல்லி நாங்கள் எல்லோரையும் மதுரை மத்திய அரசு மருத்துவமனையில் சபாபதி உட்பட அனைவரையும் சேர்த்துள்ளோம், என்று சொன்னவுடன் பதட்டத்தில் மக்கள் திலகம் மனதுடிப்புடன் உடனே, அந்த மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்க்கும் பொழுது சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில் சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான டாக்டர்களிடம் இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். வந்து தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.

அவருடைய வாழ்நாளில் 1954க்கு பிறகு வெளியூருக்கு செல்லும் போது, தனக்கு ஒரு உதவியாளர் இல்லாமல் செல்லமாட்டார். அப்படிபட்டவருக்கு 1979ல் தமிழ்நாட்டிற்கு அவர் முதல் அமைச்சராக இருந்து நாடெங்கும் நடக்கும் பொது, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வீர நடை போட்டு நடந்து கொண்டு இருந்த மாவீரனுக்கு “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழி போல் அன்றுமக்கள் திலகம் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டு விட்டது. அடுத்த நாள் மதுரை மாவட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, முதல் விமானத்தில் சென்னை வந்து சேர்ந்து விட்டார். சென்னை ராமாபுரம் தோடத்திற்கு வந்த பிறகு, அன்று முழுவதும் எங்கும் செல்லவில்லை. அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதி உடைய சடலத்தை மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவு இட்டார். அதன்படி, சபாபதியுடைய உடலை அ.இ.அ.தி.மு.க கட்சி தலைமை கழகத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசியல் மரியாதையுடன் அன்று மாலை மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்கள் திலகம் அவர்கள் இது போன்ற எவ்வளவோ பேர்கள் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். தன்னிடம் 1957ல் இருந்து 1979வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன் பிறப்பை இழந்து விட்டோமே என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தின் உடலை குழியில் வைத்தபொழுது முதல் ஆளாக நின்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிய மக்கள் திலகம் அவர்கள் மூன்று முறை கையில் மண்ணை அள்ளி குழியில் போட்டார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல தன்னிடம் வேலைசெய்யும் எவ்வளவுதான் நல்ல வேலைக்காரனாக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள் உலகத்தில் அதிகம் பேர், ஆனால் மக்கள் திலகம் அவர்கள் அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும். இது போன்ற பல துன்பமான விஷயங்களை அவருடைய வாழ்க்கை நாட்களில் சந்தித்து உண்டு.

35.வள்ளல் இரங்கல் விஷயத்திற்கு செல்லும் முறை

மக்கள் திலகம் அவர்கள் தனக்கு வேண்டியவர்கள் சினிமா துறையாக இருந்தாலும் சரி, அரசியல் துறை, அரசாங்க துறையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் இவருக்கு அந்த விஷயம் தெரிந்தால், உடனே அங்கு சென்று அவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு ஏதேனும் பணம் உதவி தேவைப்படுமானால் அதை உடனே செய்வார். அடுத்து இரங்கல், இறந்து போனவர் எப்படிபட்டவர், சினிமாவா, அரசியலா, அரசாங்க அதிகாரிகளா என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் அந்த செய்தி தனக்கு கிடைத்த உடனே அங்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு வருவார்.

இது சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்காமல் தவறாமல் அந்த காரியத்துக்கு சென்று வருவார். இதே போல் தன்னுடன் மிக நெருங்கி பழகிய தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள். பட முதலாளிகள், டைரக்டர்கள் அரசியல்தலைவர்கள், எம்.எல்.ஏ. எம்.பி மந்திரிகள் போன்றவர்களுக்கு இறுதி சடங்கு மயானத்திற்கு சென்று இறுதி சடங்கு முடியும் வரையில் இருந்து வருவார். இது ஒரு தலையாய கடமையாக வைத்து இருந்தார்.

34.திருமணப் பத்திரிகை அடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர் மக்கள் திலகம்

மக்கள் திலகம் அவர்கள் திருமணங்கள் விஷயங்களில் வித்தியாசமானவராக நடந்து கொள்வார். ஆரம்பத்தில் தான் சினிமா காலத்தில் நடித்து கொண்டு முன்னேற்றம் அடையும் சமயங்களில் படபிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) பணியாற்றுபவர்களும் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்துக்கோ திருமணம் நடந்தால் படமுதலாளி, இயக்குனர், மற்றும் இது போன்ற முக்கியஸ்தர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தவறுவது இல்லை. இந்த மாதிரி கால கட்டத்தில் தனக்கு கொடுத்த பத்திரிக்கையை நன்கு படித்துவிட்டு, அதற்கு தகுந்த மாதிரி இவருடைய வசதிக்கு ஏற்ப பணம் கொடுப்பார். ஆனால் திருமணத்திற்கு போகமாட்டார். இதனுடைய முக்கிய தத்துவம் என்னவாக இருக்கும். சரி இவருக்கு முதல் திருமணம் கேரளாவில் நடக்கும் பொழுது இவர் அப்போது சினிமாவில் நடித்து கொண்டு இருந்தார். திடீர் என்று அவருடைய தாயாரும், அண்ணனும் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டதால் இவருடைய திருமணமும் இதே போல் கேரளாவில் நடிந்தது. அடுத்த இரண்டாவது திருமணம் அதுவும் கேரளாவில் எளிமையான முறையில் நடந்தது. மூன்றாவது திருமணம் சென்னையில் இதே போல் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல் ஒரு விஷயம் அவருடைய வாழ்நாளில் முதல் முதலாக நடந்த திருமண விழாவை காண்கிறார். திருமணம் என்பது ரகசியமாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது ஒரு காதல் திருமணமாகும். அதுவும் இந்த காலத்தில் மாறிவிட்டது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ வருகை தந்து நடக்கும் திருமண விழாவாகும். ஆனால் இது மக்கள் திலகம் அவருடைய வாழ்க்கையில் ஒன்று இரண்டு, மூன்று என்று திருமணம் அவருக்கு நடந்தது. ஆனால், அது மேலே குறிப்பிட்டது போல் நடைபெறவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. பலரை சந்தித்து அழைக்கவும் இல்லை. இது அவருக்கு அவருடைய வரலாற்றில் முக்கிய விஷயமாகும்.

பிறகு, சினிமா துறையில் பிரபலம் அடைந்து இதே போல் அரசியலிலும் பிரபலம் அடைந்தபோது பலர் மக்கள் திலகம் தலைமையில்தான் திருமணம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் அவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காக பல நாட்கள் அவர்கள் அலைவதும் உண்டு. இந்த மாதிரி எந்த விஷயத்திலும் ஒதுங்கி இருக்காமல் கலந்து கொள்வதுதான் சரியாகும் இது உன்னுடைய பெயருக்கும் புகழக்கும் மிக உயர்ந்ததாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு முக்கியமானவர் மக்கள் திலகம் அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி மக்கள் திலகம் அவர்களும் இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நமக்கு இப்படி நடக்கவில்லையே அப்படி என்கிற எண்ணம் மனதில் இருக்காமல், இன்னும்நாம் உயர வேண்டிய நாட்கள் இருக்கிறது. இந்த மாதிரி முடிவுக்கு பிறகு தன் பெயரை பத்திரிகையில் இட்டு தன்முன்னிலையில் திருமணம் நடத்துபவர்கள் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு அறிந்த பிறகு, தான் சம்மதத்தை கொடுப்பார். இதில் எப்படிபட்டவர்களாக இருக்கனும் என்ற ஒரு முறை உண்டு மக்கள் திலகம் அவர்களிடம் இதில் விதி முறைகள் என்ன,
1. திருமண குடும்பத்தார் வசதியில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. காதல் திருமணமாக இருக்கக்கூடாது.
3. கோயிலில் திருமணம் நடத்தகூடாது.
4. திருமண மண்டபத்தில் ஐயர்களை வைத்து ஓம பூஜை நடத்த கூடாது.
இப்படிபட்ட திருமணங்களுக்கு தவறாமல் சென்று முன்நின்று நடத்தி வைப்பார். அது சமயம் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனி தனியாக பணம் கொடுத்து வாழ்த்துவார். அடுத்து சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிக ஆடம்பரமான முறையில் அதிக பணம் செலவழித்து திருமணம் நடத்துவார்கள் எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பலமுறை அவரே நேரில் சந்தித்து அழைப்பவர்களுடைய திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் சென்று மணமக்களை வாழ்த்தி வருவார்.

33.ஆங்கிலோ போலீஸ் அதிகாரியை பார்த்து ஆச்சர்யப்பட்டார் மக்கள் திலகம்.

இது ஒரு மலரும் நினைவாக இருந்தது.

மக்கள் திலகம் தமிழக முதல் அமைச்சர் ஆக அவையில் 1977 ஆண்டில் அரச சபையில் கோட்டையில் ஆட்சியில் அமரும் முதல்நாளன்று, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியாக (ஐ.ஜி) யாக இருந்தவர் ஒரு ஆங்கிலேயர் பார்ப்பதற்கு நல்ல உயரமாக வாட்ட சாட்டமாக இருப்பார். அவர் பெயர் டிரைசி முதல் நாள் அன்று கோட்டையில் இம்மாதிரி உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது, கோட்டையில் தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரி அப்படி அறிமுகப்படுத்தும்போது, மக்கள் திகலம் அவர்கள் அவருக்கு கை கொடுத்து அந்த அதிகாரி முதல் அமைச்சருக்கு தரும் மரியாதையை பெற்று கொள்ளும் போது சற்று நேரம் அவர் கையை பிடித்தமுதல் அமைச்சர் அவர்கள் அவரையே சற்று நேரம் உற்று பார்த்தார். பிறகு, அந்த அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையைப் பற்றியும், ஆங்காங்கே நடக்கும் அசம்பாவிதம் நடக்கும் இடங்களைப் பற்றியும், முதல் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து முக்கிய சம்பவங்களை பற்றி பேசுவார். இந்த மாதிரி விஷயங்கள் பேசுவதற்காக சென்னை தி.நகரில் அமைந்து உள்ள முதல் அமைச்சர் அலுவலகம் (மாம்பலம் ஆபீஸ்) இது இப்போது “எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்”. இந்த கட்டிடத்திற்கு, அந்த போலீஸ் அதிகாரி முதல் அமைச்சர் அவர்களை பார்க்க வரும்போதெல்லாம் இவரை வரவேற்று முதல் அமைச்சர் அமர்ந்து இருக்கும் மேல் மாடிக்கு அழைத்து செல்லும் போது அவரை பார்த்த உடனே வணக்கம் சார் என்று சொல்வேன். ஏன் என்றால் அவர் ஆங்கிலேயர் அவருக்கு அந்த வார்த்தை சொல்ல வராது. இதே மாதிரி முதல் அமைச்சர் அறைக்குள் சென்றவுடனே முதல் அமைச்சர் மக்கள் திலகம் இவரை பார்த்தவுடனே வணக்கம் வாங்க உட்காருங்க.

இந்த வார்த்தையை முதல் அமைச்சர் அவர்கள் சொல்லுவார். இதை கவனித்த அந்த போலீஸ் அதிகாரி சற்று நேரத்தில் இந்த வணக்கத்துக்குரிய உட்காருங்கள் என்ற சொல்லை சற்று நேரம் மெளனமாக நின்று விட்டு பிறகு உட்காருவார். அவர் முதல்அமைச்சர் அவர்களிடம் என்ன பேச வேண்டுமோ, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார் முழுமையாக அவருக்கு தமிழ் பேச தெரியாது. அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்களுக்கு அவர் மீது தனி ஒரு பிரியம் உண்டு. காரணம் மக்கள் திலகம் அவர்கள் 1935-ம் ஆண்டு “சதிலீலாவதி” என்ற சினிமா படத்தில் முதன்முதலில் நடிக்கும் போது போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மக்கள் திலகம். அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். மேலும், அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். இதையும் அவர் பல வருடங்கள் கழித்து பல போராட்டங்களை சந்தித்து தான் வந்து ஒரு முதல்அமைச்சராக அமர்ந்த அன்று தன் கட்டுப்பாட்டில் உள்ள மிக பொறுப்பில் உள்ள போலீஸ் இலாகா, அந்த போலீஸ் இலாகாவில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியான (ஐ.ஜி) ஒரு ஆங்கிலேயர்? இதை நினைத்து ஆனந்த பூரிப்பு அடைந்தார். ஆனால், அவர் ஒரு சில மாதங்களில் வயது கட்டுப்பாட்டின்படி ஓய்வு பெற்றுவிட்டார்.

சிறப்பு குறிப்பு:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் படமான “சதிலீலாவதி” 1935 நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் பிறகு 42 ஆண்டுகள் கழித்த பிறகு, தமிழக முதல் அமைச்சர் ஆனபிறகு, தன் இலாகாவான போலீஸ் இலாகாவின் போலீஸ் அதிகாரி I.G. அவர்கள் ஒரு ஆங்கிலேயர் ஆவார்.